கட்டிகள் பழுத்து உடைய சர்க்கரை நோய் மற்றும் வெள்ளைப் போக்கு மூட்டு வலி என்பவற்றிற்கு சிறந்த நிவாரணி வெண்டைக்காய்!

0
1010

150 கிராம் அளவான பிஞ்சு வெண்டைக்காயை 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உட்கொண்டு வரும் போது ஆண் பெண் இருபாலாருக்குமே வெள்ளைப் போக்கு இருமல் நீர்க்கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடையும்.

உடலில் ஏற்பட்டுள்ள புண் வீக்கம் வலியுடனான கட்டி போன்றனவற்றிற்கு இளம் வெண்டைக் காய் அல்லது வெண்டைச் செடியின் இலைகளை நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வரும் போது புண்கள் விரைவில் ஆறுவதுடன் கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனையும் குறையும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை தொடர்ந்து சில நாட்கள் சுவாசித்து வரும் போது இருமல் தொண்டைப்புண் தொண்டைக் கம்மல் தொண்டைக்கட்டு மற்றும் தொண்டை எரிச்சல் போன்றன குணமடையும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து நன்கு ஆறிய பின்னர் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வரும் போது வயிற்று வலி ஏற்பட்டு வெளியகற்றப்படுவதுடன் நினைக்கழிச்சல் பெருங்கழிச்சல் மற்றும் குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) போன்ற நோய்கள் குணமடையும்.

வெயிலின் மிகுதியான தாக்கத்தினால் மயக்க நிலை ஏற்படலாம் என அஞ்சுபவர்களும் ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்களும் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும்.

இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அக்காய்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்துவரும் போது மூட்டு தேய்வு மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும்.

தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீரை மட்டும் குடித்து வரும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைவடைவதுடன் புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட இது ஒரு துணை மருந்தாக காணப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையை அச்சுறுத்தும் படைப்புழுவின் பின்னணியில் அரசாங்கத்தின் சதியா?
Next articleஎவ்வளவு கொடிய‌ விஷக்கடியாக இருந்தாலும் விஷத்தை முறித்து உயிர் காக்கும் பேய்ச்சுரை என்னும் காட்டுசுரை !