உ.ற.வி.ன் போது ஆணுறுப்பு சீக்கிரமா சுருங்கிடுதா? அதுக்கு இதுதான் காரணம் இனிமேல் அத செய்யாதீங்க !

0

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு செயலிழப்பு பற்றி அமெரிக்க யூரோலஜிகல் அசோஸியேஷன் சில தகவல்களை கூறியுள்ளது. இந்த விறைப்பு செயல்பாடு என்பது நரம்பு, நரம்பியல், ஹார்மோன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு ஏற்படுகிறது. மருந்துகள், உடல் நல பிரச்சினைகள், காயங்கள், புகைப் பிடித்தல் போன்ற ஏராளமான காரணங்களால் இந்த விறைப்பு செயலிழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த நவீன கால பழக்க வழக்கங்களும் இந்த பிரச்சினைகளில் முக்கிய பங்காற்றுகிறது என்கிறார்கள்.

உங்களுக்கு விறைப்பு செயலிழப்பு இருக்கிறதா இல்லையா என்பதை மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்தி கொள்ளலாம். கீழ்க்கண்ட காரணிகள் இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. அவற்றைப் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

பொதுவாக ஆண்கள் வயதாகும் போது பாலியல் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். 1994 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் ஆண் வயதாகுதல் பற்றிய ஆய்வின் படி 5-15% ஆண்மை இழப்பு கிட்டத்தட்ட 40-70 வயதில் ஏற்படுகிறது என்கின்றது. இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் விறைப்பு செயலிழப்பு மற்றும் பிற பாலியல் பிரச்சினைகள் இந்த வயதில் ஏற்படுவதில்லை. ஆனால் நாள்பட்ட பாலியல் பிரச்சினைகள் விறைப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கும். பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடின்றி இருத்தல் கூட விறைப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கும். எனவே ஒரு ஆண் வயதாகும் போது தங்கள் உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம் என்கின்றனர்.

சில மருந்துகள் ஆணுறுப்பில் உள்ள நரம்புகளை இடையூறு செய்து இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் அறிக்கையின்படி, சுமார் 25 சதவீத ஆண்களுக்கு இப்பிரச்சினை ஏற்பட உட்கொள்ளும் மருந்துகளே காரணம் என்கின்றனர். அதிக இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திற்காக சாப்பிடும் மருந்துகள் ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்துகிறதாம். எனவே இந்த மருந்துகளை நீண்ட காலம் சாப்பிட்டு வரும் போது ஆண்மை இழப்பு ஏற்படும். எனவே உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்து செயல்படுவது நல்லது.

புற்றுநோய் கீமோதெரபி :மைலார்ன் மற்றும் சைடோசன் புற்றுநோய் சிகச்சையில் இடுப்பிற்கு கீழே ஏற்படும் கதிரியக்க பாதிப்பால் விறைப்பு செயலிழப்பு ஏற்படுதல் உயர் இரத்த அழுத்த மருந்துகள் மைக்ரோசைடு(ஹைட்ரோகுளோரோதயசைடு) பீட்டா – ப்ளாக்கர்ஸ், இண்ட்ரல்XL (ப்ரோபிரானோல்) ஆன்டி அனிஸ்சிட்டி மருந்துகள், பாஸில் (பரோக்ஸ்டைன்), மன அழுத்த மருந்துகள் (ஷோலோவ்ட்), ஆன்டி ஸ்கோரோஃப்ரெனியாமருந்துகள் (செரோக்வெல் (குயிடீபைன்)) வாலீம் (டயஸெபம்) புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஹார்மோன் மருந்துகள் எலியக்சின் (புளூட்டமைட்) மற்றும் லுப்ரோன் (லுபுரோலிடு) புரோசிசியா (ஃபைனான்ஸ்டைட்), இது புரோஸ்டேட் பெரிதாகுதல் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் முடி இழப்பிற்கு பயன்படும் மருந்துகள் அல்சர் மருந்துகளான ஹிஸ்டமைன் H2- ஏற்பு எதிர்ப்பாளர்களான டாக்மட் (சிமெடிடின்) மற்றும் சாந்தாக் (ரனிடிடின்) பெனட்ரைல் (டிஃபென்ஹைட்ரமைன்) மற்றும் விஸ்டரைல் (ஹைட்ராக்ஸ்சின்) போன்ற ஒவ்வாமைகளைக் கையாளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிஹிஸ்டமைன் மருந்துகள். நிஜோரல் (கெட்டோகொனசோல்) போன்ற பூஞ்சை தொற்றுக்கான ஆன்டிபாயாடிக் மருந்துகள். ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் நாப்ராக்ஸன் போன்றவற்றை அடிக்கடி எடுத்து வருதல். மேற்கண்ட மருந்துகள், சிகச்சைகள் விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது.

சிகிச்சைகள் இடுப்பு பகுதியில் செய்யும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் நரம்பு பாதிப்பு, இரத்த நாளங்கள் பாதிப்பு போன்றவை கூட விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதே மாதிரி புரோஸ்டேட் புற்றுநோயின் போது செய்யும் அறுவை சிகிச்சையும் ஆண்மை இழப்பை உண்டாக்கும் அபாயம் உள்ளது. குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் புற்று நோய் கட்டியோடு குடல் பகுதியை நீக்குவதும் ஆண்மை இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இடது ஹெமிகோலெக்டோமி (பெருங்குடலின் இடது பகுதியை அகற்றுவது) அடிவயிற்றில் சிகச்சை (மலக்குடல் வெளிதோல் அகற்றுதல்) ப்ரோடொக்டோமி (மலக்குடல் அகற்றுதல்) குடல் அறுவை சிகிச்சையின் போது சரும உணர்திறன் இழப்பு ஏற்படுகிறது. அதாவது இடுப்பு பகுதியை கட்டுப்படுத்தும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் இறுதியில் ஆண்மை இழப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

காயங்கள் நரம்புகள், தமனிகள் மற்றும் இடுப்பு நரம்புகள் போன்றவற்றில் ஏற்படும் காயங்கள் செக்ஸூவல் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. ஆண்களுக்கு ஏற்படும் முதுகுத்தண்டு காயம் போன்றவை தாம்பத்தியத்தில் இன்பம் இல்லாமல் இருத்தல், விறைப்பு செயலிழப்பு போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது.

டைப் 1&2 டயாபெட்டீஸ் நோய்கள் கூட ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பை ஏற்படுத்தி விடுமாம். 2017 ஆம் ஆண்டு டயாபெட்டீஸ் மெடிசன் என்ற தகவலின் படி பாதிக்கு மேற்பட்ட டயாபெட்டீஸ் ஆண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர் என்று எச்சரிக்கை ரிப்போர்ட் அளிக்கிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஆணுறுப்பின் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. இதே மாதிரி இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கரோனரி தமனி நோயும் டயாபெட்டீஸ் மாதிரி ஆணுறுப்பின் செயல்பாட்டை குறைப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது.

விறைப்பு தன்மை என்பது ஆணுறுப்பில் பாயும் இரத்த ஓட்டத்தை பொருத்து அமைகிறது. எனவே உயர் ரத்த அழுத்தம் ஆணுறுப்பில் உளள சிறிய இரத்த நாளங்களை சிதைவடையச் செய்வதால் இரத்த ஓட்டம் தடைபட்டு அங்கே விறைப்பு செயலிழப்பை உண்டாக்கிறது என்கின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஹார்மோன் மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் விந்தணு க்களின் எண்ணிக்கை குறைதல், டெஸ்டிரோடிரோன் ஹார்மோன் மாற்றம் போன்றவற்றை ஆண்கள் சந்திக்கின்றனர்.

நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் இரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்ய போதுமான நைட்ரிக் ஆக்ஸைடு இல்லாமல் ஆக்கி விடுகிறது. இதனா‌ல் ஆணுறுப்பில் உள்ள இரத்த குழாய்கள் பாதிப்படைந்து ஆண்மை இழப்பு ஏற்படும்.

சில ஆராய்ச்சிகளின் படி உயர் இரத்த அழுத்தத்தின் போது ஆணுறுப்பில் இரத்தம் அதிக வேகமாக இரத்த குழாய்களில் பாயும் போது இரத்த குழாய் வால்வுகள் திறந்து மூடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

மன அழுத்தம், அனெக்சிட்டி, மன உளைச்சல் சீர்கேடு, கவலை போன்றவையும் விறைப்பு செயலிழப்பிற்குக் காரணமாக அமைகின்றன. இந்த உளவியல் காரணங்கள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. அதில் சில உங்களுக்குப் புதிதாகவும் சில ஏற்கனவே கேள்விப்பட்டதாகவும் இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

சிறுநீரக மற்றும் சிறுநீரக பாதை பாதிப்பு சிறுநீரக பாதை தொற்று, சிறுநீரக உறுப்பு பாதிப்பு போன்றவை ஆண்மை இழப்பை ஏற்படுத்தும் பர்கின்சர் நோய், எபிலப்சி, பக்கவாதம், ஸ்கெலரஸிஸ், மூளை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக அமைகிறது.

நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் யின் 20 11 ஆம் ஆண்டு தகவல் படி யூயார்க் நகரில் உள்ள சினாய் மருத்துவ மையம், ஸ்லீப் அனிமியாவும் விறைப்பு செயலிழப்பிற்கு ஒரு காரணமாக அமைகிறது. வாழ்க்கை பழக்க வழக்கங்கள் பொழுதுபோக்கு மருந்துகள் ஆல்கஹால் புகைத்தல், நிக்கோடின், புகைப் பழக்கம் டெக்சாடெரின் (டெக்ஸ்ட்ரம்பேட்டமைமைன்) போன்ற ஆம்பெட்டமைன்கள் பினோபார்பிடல் போன்ற பார்பிட்யூரேட்ஸ் கோக்கைன் மரிஜூனா மெத்டோன் ஹீரோயின் மற்றும் ஒக்ஸிகோனின் போன்ற ஓபியன்கள்.

சைக்கிள் ஓட்டுப் போது ஆணுறுப்பில் உண்டாகும் அதிகமான அழுத்தம் அந்த பகுதியில் காயங்களை ஏற்படுத்தி விறைப்பு பிரச்சினை உண்டாக்குகிறது. அதிக நேரம் பைக் ஒட்டுவது, 24 மணி நேரமும் ஓட்டுதல், பயண ஓட்டுனர் தொழில் புரிபவர்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். 40-70 வயதை அடைந்த கிட்டத்தட்ட 1700 ஆண்கள், வாரத்திற்கு 3 மணி நேரம் சைக்கிள் ஓட்டினாலே இரத்த குழாய் அடைப்பு மற்றும் ஆணுறுப்பில் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இதில் பைக் சீட் அமைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அமர்ந்து ஓட்ட ஏதுவாக சீட் அமைப்பு இருக்க வேண்டும். அகலமான சீட் அமைப்பு ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடுமையான சளி, இருமல், தலைவலியை போக்க சூடா ஒரு கப் திரிகடுக காஃபீ செய்முறை மற்றும் பலன்கள்!
Next articleஉடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள்!