வியப்பை ஏற்படுத்தும் பல அதிசயங்கள்! பிரதான நாடொன்றின் சொர்க்கபுரியாக மாறிய இலங்கை!

0
235

சமகாலத்தில் அவுஸ்திரேலியர்கள் அதிகமாக விரும்பும் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ட்ரெவலர் என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றலா பயணம் மேற்கொள்ள அதிகளவான அவுஸ்திரேலியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை அவுஸ்திரேலியர்களுக்கு பிடித்த நாடாக இருந்த தாய்லாந்தின் பெங்கொக் நகரம் மற்றும் இந்தோனேஷியாவின் பாலி தீவினை தோல்வியடைய செய்து இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் மிக சிறந்த சபாரி நாடாக இலங்கையை அவுஸ்திரேலியர்கள் பெயரிட்டுள்ளனர்.

கடந்த வருடம் இலங்கைக்கு வந்த அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடப்படுமிடத்து, இந்த வருடத்தில் 38 சதவீத அதிகரிப்பாகும்.

அழகான காடுகள், நட்புறவான இலங்கையர்கள், அழகிய சபாரி, வித்தியாசமான பறவை மற்றும் விலங்குகளே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.

அருகமபே, பெந்தோட்ட, திக்வெல்ல, ஹிரிகெட்டிய போன்ற பிரதேசங்கள் அவுஸ்திரேலியர்களின் பிடித்தமான பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள கூடிய இடமாக இலங்கை காணப்படுவதாக அவுஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மலையகத்தில் ரயில் பயணம் மேற்கொள்வதற்கும், நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கே தாங்கள் அதிகமாக எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலியர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: