விபத்தில் பரிதாபமான பலியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவன்!
வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்துடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் வவுனியா சிதம்பரபுரத்தை சேர்ந்த மாணவரொவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குறித்த மாணவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி வந்தவர் என தெரியவருகிறது. இச் சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) என்பவரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை மோட்டார்சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
By: Tamilpiththan