விந்துவை கட்டியாக மாற்றும் உணவுகள்!

0
5887

விந்துவானது சற்று கட்டியாக வர வைப்பதற்கான சில உணவு வகைகள் கீழ்வருமாறு:

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூவை நிழலில் காயவைத்து, பொடி செய்து, 2 கிராம் எடுத்து காலை, மாலை இரண்டு வேலைகளில் பசும் பாலில் சாப்பிட்டு வரும் போது ஆண்மையை அதிகரிக்கும்.

மாதுளை பழம்

தினமும் இரவு ஒரு மாதுளை பழம் சாப்பிட்டு வரும் போது நீர்த்து போன விந்தானது விரைவில் கட்டியாகுவதுடன்,; உடலில் சூடு நீங்கி உடல் குளிர்ச்சியடையும்.

வெண்டைக் காய்

வாரத்திற்கு இரு முறை, அல்லது மூன்று முறை வெண்டைக் காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் போது விந்தானது கட்டும். இங்கு 4 அல்லது 5 வெண்டைக் காயை பச்சையாகவும் சாப்பிடலாம்.

முருங்கை கீரை

முருங்கை கீரையை பறித்து சிறிதளவு நீர் சேர்த்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் நீர்த்து போன விந்து கட்டியாக மாறும். மேலும் இது சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் என்பனவற்றைக் கட்டுபடுத்தி இரத்தம் விருத்தியடையும். மேலும், இதனை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் போது விந்து கட்டியாகுவதுடன், விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்.

மேலும், முருங்கை கீரையுடன், முருங்கைப் பூவை சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வரும் போது ஆண்மை சக்தி அதிகரிப்பதுடன், காம சக்தியை பெருகுதல், விந்துவானது கட்டியாகுதல் என்பனவும் இடம்பெறும். இதனை காலை, மாலை என தினமும் இரு வேளைகளில் சூடான பசும் பாலில் கலந்து, பால் சூடாறிய பின்னர் சாப்பிட்டு வரும் போது ஆண்மை பிரச்சனைகள் நீங்கும்.

இதனைவிட, முருங்கை கீரை, முருங்கைப் பூ, வாழைப் பூ ஆகிய மூன்றினையும் சேர்த்து ஒரு நாள் இடைவெளி விட்டு பொரியல் செய்து சாப்பிட்டு வரும் போது நீர்த்து போன விந்தானது கட்டுவதுடன், சிறு நீரில் விந்து செல்லுதல் சரியாகுதல் மற்றும் எலும்புகளும், நரம்புகளும் வலுவடைந்து உடல் வலிமை பெறும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: