ஆண்களின் ஆண்மை குறைவிற்கு விந்தணு நீந்து சக்தி ஒரு காரணமா!

0
1605

ஆண்களின் ஆண்மை தன்மைக்கு காரணம் அவர்களின் உடலமைப்பு மட்டும் காரணம் அல்ல; அவர்தம் உடலுக்குள் இருக்கும் விந்தணுக்கள் தான் ஆண்களின் ஆண்மைக்கு காரணம்! அப்படிப்பட்ட விந்தணுக்களை ஆரோக்கியமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஆண்களின் கடமை. விந்தணுக்கள் ஆரோக்கியமாக மற்றும் அதிகமாக இருந்தால் மட்டுமே ஆண்களின் ஆண்மை அழியாமல் இருக்கும்!

விந்தணுக்கள் ஆண்களின் உடலில் அதிகம் இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி அவை சரியான அளவு பயணிக்கும் திறனை கொண்டு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். விந்தணு பவிந்தணுக்கள் ஆண்களின் உடலில் அதிகம் இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி அவை சரியான அளவு நீந்து சக்தி திறனை கொண்டு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். விந்தணு நீந்து சக்தி சரியான அளவில் இருந்தால் மட்டும் தான், ஆண்களால் விரைவில் அப்பாவாக முடியும். ஆம் நண்பர்களே விந்தணுக்கள் நன்கு நீந்தி பெண்களின் அண்டத்தை துளைத்து உள் சென்றால் மட்டுமே ஆண்களால் தந்தையாக முடியும்.சரியான அளவில் இருந்தால் மட்டும் தான், ஆண்களால் விரைவில் அப்பாவாக முடியும். ஆம் நண்பர்களே விந்தணுக்கள் பயணித்து பெண்களின் அண்டத்தை துளைத்து உள் சென்றால் மட்டுமே ஆண்களால் தந்தையாக முடியும்.

விந்தணு நீந்து சக்திசரியான அளவில் ஆண்களின் உடலில் இல்லை எனில், அது ஆண்மைக் குறைவிற்கு ஒரு முக்கியமான காரணம் தான். குழந்தை பிறப்பு நிகழ்வதில்லை பெண்களுக்கு எந்த அளவு பங்கு உள்ளதோ, அதே அளவுக்கு ஆண்களுக்கும் பங்கு உள்ளது. ஆண்களின் விந்தணுக்களின் அளவும், ஆரோக்கியமும் அவற்றின் நீந்து சக்தியும்சரியாக இருக்க வேண்டியது, குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமான விஷயங்கள்!

ஆண்களில் காணப்படும் விந்தணுக்கள் ஒரு நொடிக்கு இருபத்து ஐந்து மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் நகர்ந்து நீந்தி செல்லவேண்டும்; அதாவது விந்தணுக்கள் 25 um/second என்ற அளவில் நீந்தி செல்லவேண்டும். ஆண்களின் உடலில் விந்தணுக்களின் நீந்து சக்தியின்வேகம், ஒரு வினாடிக்கு 5 மைக்ரோ மீட்டர்கள் என்று இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்; ஏனெனில், இந்த வேகத்தில் நீந்தி செல்லும் விந்தணுக்களால் கண்டிப்பாக குழந்தை பிறப்பை ஏற்படுத்த முடியாது. குழந்தை பிறப்பு ஏன், பெண்ணின் உடலில் உருவாகி ஆணுக்காக காத்திருக்கும் அண்ட முட்டையை கூட அடைய முடியாது.

ஆண்களின் உடலில் காணப்படும் விந்து அணுக்களில், குறைந்தது 40 சதவிகிதம் விந்துக்கள் ஆவது சரியான நீந்து சக்தியைஅளவு கொண்டு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே தந்தை ஆவது எளிதாக இருக்கும். 40 சதவிகிதம் தவிர மீதி அணுக்கள் ஆரோக்கியமாக, சரியான அளவு கொண்டு இருந்தால் நல்லது தான். அப்படி இல்லையெனில் 100 சதவிகிதத்தில் 40 சதவிகிதமாவது சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆண்களின் உடலில் இருக்கும் விந்து அணுக்களில் குறைந்த பட்ச அளவாக 32 சதவிகிதம் விந்து அணுக்கள் ஆவது சரியான ஆரோக்கியம் மற்றும் மிகச்சரியான நீந்து சக்தி அளவு கொண்டு இருக்க வேண்டும். மேற்கூறியது போல 25 மைக்ரோ மீட்டர்கள் கண்டிப்பாக நகரும் அளவை கொண்டு இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான நிலையில் விந்து அணுக்கள் உள்ளன என்று அர்த்தம்!

விந்து அணுக்களின் நீந்து சக்திகுறித்து இதுவரை யாரும் அத்துணை முக்கியத்துவம் அளித்து கூறியது இல்லையே! இது என்ன அவ்வளவு முக்கியமானதா என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இது மிக மிக முக்கியமானது தான். விந்து அணுக்கள் சரியான வேகத்துடன் நீந்தி சென்று பெண்ணின் அண்ட முட்டையை அடைந்தால் மட்டுமே கருவுறுதல் நிகழும். விந்து அணுக்களின் நீந்து சக்திஇல்லாமல், குழந்தை பிறப்பு நிகழ சாத்தியம் என்பது 0 சதவிகிதம்; அதாவது வாய்ப்பே இல்லை என்று கூறலாம்.

விந்து அணுக்களின் நீந்து சக்திகுறைய என்ன காரணம் என்று பார்த்தால், ஆண்களின் வாழ்க்கை முறை தான். புகை பிடிக்கும் ஆண்களுக்கு, அதிக நேரம் கணினியை மடியில் வைத்து இருக்கும் ஆண்களுக்கு, ஆண்களின் பிறப்பு உறுப்பில் அதிகம் அதிர்ச்சிகளை பெறும் ஆண்களுக்கு கண்டிப்பாக விந்து அணுக்களின் நீந்து சக்தி பாதிப்பு அடைவதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆண்கள் தங்கள் உடலின் விந்து அணுக்கள் பயணிப்பு குறைந்து இருப்பதை மருத்துவரிடம், சென்று, பிறப்புறுப்பு திரவத்தை சோதித்து பார்க்க அளித்து தெரிந்து கொள்ளலாம்.!

ஆண்களின் விந்தணு நீந்து சக்திசரியான அளவில் இருக்க, ஆண்கள் சரியான நேரத்தில், சத்தான ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்; மது, புகை மற்றும் பிறப்புறுப்பில் அதிர்ச்சி ஏற்படுத்தும் விஷயங்களினை தவிர்க்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் கணினியை மடியில் வைத்து வேலை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். வருத்தம் மற்றும் அழுத்தம் போன்ற உணர்வுகள் இன்றி மகிழ்ச்சியாக இருக்க முயல வேண்டும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது! அவை என்ன தெரியுமா?
Next articleகர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாந்து படுத்தால் குழந்தை இறந்து பிறக்குமா? வேறு எப்படி படுக்கவேண்டும்? பகிருங்கள்!