விடிய விடிய விசாரணை! நிர்மலா தேவி சொன்னது என்ன? செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்!

0
316

தமிழகத்தில் மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற குற்றத்திற்காக, கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணையில் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக உள்ள நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசிய விடயம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று நிர்மலா தேவியின் வீட்டை சுற்றி வளைத்த பொலிசார், வீட்டின் கதவை உடைத்து அவரை கைது செய்தனர்.

பின்னர், அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் நிர்மலா தேவி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.

அப்போது, மாணவிகளை பாலியலுக்கு அழைக்க கூறியதாக நீங்கள் குறிப்பிடும் உயர் அதிகாரிகள் யார்?, இதற்கு முன்னரும் இது போன்று மற்ற மாணவிகளிடம் பேசி இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசியது நான் தான். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் இந்த விடயத்தில் என் மீது பழி போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேலும் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நிர்மலா தேவி இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

நிர்மலா தேவி மீது பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றச் செயலுக்கு முயற்சி செய்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு உடனடி ஜாமீன் கிடைக்காது.

இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: