விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை!

0
418

விஜய் எப்போதுமே அதிகம் பேசமாட்டார், அமைதியாக தான் இருப்பார் என பலர் சொல்வார்கள். ஆனால் அவர் அப்படியில்லை. மிகவும் நன்றாக பேசுவார். ஜோக் அடிப்பார். அன்பு காட்டுவார் என அவருடன் பழகிய பிரபலங்கள் சொல்கிறார்கள். அவருக்கு பெரியளவில் மாஸான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

சினிமாத்துறையிலும் அவரை விரும்பும் பலர் இருக்கிறார்கள். அண்மையில் நடிகர் பிரேம் பேட்டியளித்துள்ளார். யார் இவர் என நீங்கள் கேட்கலாம். விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்த பிரேம் தான் இவர்.

இன்னும் சொல்லப்போனால் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவரும் பூஜாவும் வெற்றி பெற்றார்களே. அதே பிரேம் தான். அவர் தற்போது விஜய் சார் பேசமாட்டார், மிகவும் அமைதியாக இருப்பார் என சொல்கிறார்கள். ஆனால் ஒரு முறை விசேஷ நிகழ்ச்சியில் அவரிடம் நேரடியாக போய் பேசினேன்.

அப்போது அவர் விக்ரம் வேதா படம் பார்த்தேன். நன்றாக நடித்திருக்கிறீர்கள் என வாழ்த்தினார். பின் படபிடிப்புகளில் அடுத்த முறை பார்த்த போது வா நண்பா என நெருக்கமாக பேசினார் என பிரேம் கூறினார்.

அவர் படப்பிடிப்பிற்கு வந்த போது அனைத்து ரசிகர்களும் அவரின் கார் மீது விழுந்தார்கள். ரசிகர்களின் அவ்வளவு அன்பை அப்போது தான் நேரில் பார்த்தேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: