விஜயின் மெர்சல் படத்துக்கு மீண்டும் பிரச்சனை புறாவால் வந்தது!! தீபாவழிக்கு மெர்சல் வருமா என்பது சந்தேகம்!!
தளபதி விஜய் படம் என்றாலே பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வெளியாகும் இது இப்போ வந்தது இல்லை, காவலன் படத்திலிருந்து ஆரம்பித்த பிரச்சனை.
ஆனால், மெர்சலுக்கு மட்டும் மேலும் மேலும் குடைச்சல் என்று தான் சொல்லணும், காரணம் ஒன்னு போனால் ஒன்னு ஒரு வருது பட்ட இடத்திலே படும் என்று சொல்லவது போல இப்போது தான் திரையரங்க பிரச்சனை முடிந்தது அதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது.
முதலில் டைட்டிலுக்கு தடை போட்டு பின்னர் கோர்ட் தடையை நீக்கியது. பின்னர் கேளிக்கை வரி பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் புதிய படம் ரிலீஸ் ஆக கூடாது என ஸ்ட்ரைக் அறிவித்தது. அந்த பிரச்சனை இன்னும் முடியல.
இதுஒருபுறமிருக்க தற்போது படத்தில் பயன்படுத்திய புறா கிராபிக்ஸ் தான் என்பதற்கு போதிய ஆதாரம் சமர்பிக்காததால் விலங்குகள் நல வாரியம் தாடையில்லா சான்று வழங்கவில்லை. மேலும் படத்தில் வரும் ராஜ நாகத்தின் பெயரையும் மாற்றி தெரிவித்துள்ளனர்.
அதனால் தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் மெர்சல் சொன்னபடி தீபாவளிக்கு வெளிவருமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தும் தயாரிப்பாளர் எப்படியும் படத்தை குறித்த நேரத்தில் வெளியிட போராடி வருகிறார் .
“ஒரு புறாவுக்கு போரா பெரிய அக்கப்போரா அல்லவா இருக்கே!” என இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் வடிவேடலு சொல்வதைப்போல இப்போ புறா மூலம் தளபதி படத்திற்கு பிரச்சனையை அனுப்பியுள்ளனர்.