வாஷிங் மெஷினை தூய்மையாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்!

0

அன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும், எந்த ஒரு மெஷினின் உதவியின்றி தான் செய்து வந்தனர். இன்றைய நவீன காலத்தில், அனைத்து வேலைகளுக்கும் மெஷின் வந்துவிட்டது. அதனால் நம் வேலைகளும் சுலபமாகிவிட்டது. அப்படி நம் கஷ்டத்தை குறைத்த ஒரு முக்கியமான இயந்திரம் தான் வாஷிங் மெஷின்.

இது துணிகளை கைகளால் துவைக்கும் சிரமத்தை அடியோடு அழித்துவிட்டது. சரி, வாஷிங் மெஷின் இருந்தால் மட்டும் போதுமா? அதன் பராமரிப்பும் முக்கியம் அல்லவா? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.

அதனால் மெஷின் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தானே நன்றாக செயல்படும். அதனால் அதனை சரிவர சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். உங்கள் வாஷிங் மெஷின் பார்ப்பதற்கு அழுக்காகவும் பழசாகவும் இருக்கிறதா? மறுபடியும் அதற்கு பொழிவை கொண்டு வர, அதனை சுத்தம் செய்ய, உங்களுக்காக நாங்கள் 5 டிப்ஸ்களை தருகிறோம்.

டிடர்ஜெண்ட் போடும் பகுதியை சுத்தப்படுத்துங்கள் : டிடர்ஜெண்ட் போடும் பகுதி நோய் நுன்மங்களுக்கு புகலிடமாக விளங்கும். அந்த பகுதி வாஷிங் பவுடரால் சூழப்பட்டு கட்டியாகி இருக்கும். முடிந்தால் அந்த பகுதியை அப்படியே எடுத்து விட்டு பழைய டூத் பிரஷை கொண்டு சுத்தப்படுத்துங்கள். சாதாரண முறையில் சுத்தப்படுத்தினாலே போதுமானது.

வடிகட்டி அடைப்பை நீக்குங்கள் : வடிகட்டி உள்ள இடம் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், அங்கேயும் நோய் நுன்மங்கள் தங்கும். ஆகவே அதனை அடிக்கடி காலி செய்து, உள்ளிருக்கும் அழுக்கை நீக்குங்கள்.

ட்ரம்மை சுத்தப்படுத்துங்கள் : வாஷிங் மெஷினின் உட்புறம் பார்ப்பதற்கு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அது நிஜம் அல்ல. உள்ளே இருக்கும் பல ஓட்டைகள் மற்றும் வெடிப்புகள் மூலமாக, நோய்கள் வேகமாக பரவும்.

அதனால் மாதத்தில் சில நாட்கள் வெறும் மெஷினை ஓட விடுங்கள். அதிலும் சோடா உப்பு அல்லது டிஷ் வாஷர் மாத்திரைகளை பயன்படுத்தி, 60 டிகிரி வெப்பத்தை கொண்ட நீரில் மெஷினை ஓட விடுங்கள். இது நோய் கிருமிகளை அழித்து, கெட்ட வாசனையை நீக்கும். மேலும் சோப்பு கறைகள் உண்டாவதையும் தடுக்கும்.

கெட்ட வாசனைளை நீக்குங்கள் : துவைத்து முடித்த பின், ட்ரம்மை சுற்றி காற்றோட்டம் இருப்பதற்காக வாஷிங் மெஷினின் கதவை லேசாக திறந்து வையுங்கள். இதனால் நோய் கிருமிகள் வராமல் ட்ரம்மை சுத்தமாக வைத்திருக்கும்.

சரியான டிடர்ஜெண்ட்டை பயன்படுத்துங்கள் : நீர் வடிவிலான லிக்விட்டை பயன்படுத்துவதற்கு பதில் பவுடரையே பயன்படுத்துங்கள். லிக்விட் வடிவிலான பொருட்களை பயன்படுத்தினால், அவைகள் மெஷினில் படிந்துவிடும். இது கெட்ட வாசனைகள் மற்றும் கறைகளை உண்டாக்கும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநகங்கள் உடையாமல் நீளமாக வளர எளிய டிப்ஸ்!
Next articleமணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்!