வாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா!

0
1797

நமது வாழ்க்கையில் முன்னேற முயற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல அதிர்ஷ்டமும் முக்கியம். ஆனால் அது அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. துரதிர்ஷ்டத்தால் வாழ்க்கையில் தொடர்ந்து சிரமங்களுக்கு ஆளாகிறவர்களா நீங்கள்? நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நினைப்பவர் நீங்கள்? இந்த உலகத்தில் நீங்கள் மட்டும் தனித்து விடப்பட்டவர் போல உணருகிறீர்களா? கவலைப்படாதீர்கள் உங்களை போல நினைப்பவர்கள் எண்ணற்றவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

உண்மையில் கூற வேண்டுமென்றால் உங்களை துரதிர்ஷ்டம் துரத்தவில்லை, நீங்கள்தான் அவ்வாறு நினைத்து கொண்டிருக்கிறீர்கள். மற்றொரு முறையில் கூற வேண்டுமென்றால் உங்களின் துரதிர்ஷ்டத்தை விரட்டும் வழி உங்களுக்கு தெரியவில்லை என்றே கூறலாம். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துரதிர்ஷ்டத்தை விரட்டும் எளிய வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஊதுபத்திகள்
துரதிர்ஷ்டம் மற்றும் கெட்ட நேரத்தை விரட்டும் விரைவான வழி ஊதுபத்தி ஆகும். பூஜைகள் செய்யும்போது எப்பபொழுதும் ஒற்றைப்படை எண்ணிலேயே ஊதுபத்திகளை பயன்படுத்தவும். செயற்கை ஊதுபத்திகளை பயன்படுத்தாமல் எப்பொழுதும் சந்தன ஊத்துப்பதிகளை மட்டும் வீட்டில் பயன்படுத்தவும். இது உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டும்.

சாவி
அதிர்ஷ்டத்தை வழங்கும் பொருட்களை அணிவது துரதிர்ஷ்டத்தை விரட்டும் மற்றொரு வழியாகும். உலகின் பல கலாச்சாரங்களில் சாவி என்பது அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சாவி அணிவது உங்கள் செல்வம், ஆரோக்கியம் மற்றும் காதல் மூன்றின் கதவுகளையும் திறக்கும்.

கோல்டு மீன்
உங்கள் வீட்டில் மீன் தொட்டியில் கோல்டு மீன் வைத்திருப்பது உங்கள் வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகரிப்பதுடன் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். நீங்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளை சந்தித்தால் இந்த வழியை பின்பற்றலாம். 8 கோல்டு மீன்களுடன் 1 தங்க மீனை சேர்த்து வீட்டில் வைத்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிக அதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.

உப்பு
உப்புகளை வைத்து சடங்கு செய்யும்போது பெரும்பாலும் கடல் உப்பை வைத்தே செய்யுங்கள். உப்பு என்பது இயற்கை மனிதர்களுக்கு அளித்துள்ள பரிசாகும். இது உங்கள் துரதிர்ஷ்டத்தை விரட்டுவதோடு நல்லன் நேரத்தையும் கொண்டுவரும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வீட்டின் நான்கு மூலைகளிலும் இரண்டு ஸ்பூன் உப்பை வைக்க வேண்டும். இதை ஒரு சிறிய டப்பாவில் வைத்து விடவும்.

நன்கொடை
உங்கள் வாழ்வில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டவும் நல்ல கர்மாவை அதிகரிக்கவும் மிகவும் எளிதான வழி நன்கொடை செய்வதாகும். முடிந்தளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு உதவி செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல எப்படிப்பட்ட மனதுடன் உதவி செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

குதிரை லாடம்
பல நூற்றாண்டுகளாகவே குதிரை லாடம் என்பது அதிர்ஷ்டத்தை வழங்கும் பொருளாக கருதப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் குதிரை லாடம் வைத்திருப்பது உங்களின் அதிஷ்டத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பல மேற்கத்திய நாடுகளில் இரும்பு குதிரை லாடம் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் பொருளாக உள்ளது, இந்தியாவிலும் சில இடஙகளில் இது அதிர்ஷ்டத்தை வழங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தவளை
பல கலாச்சாரங்களில் தவளை செழிப்பு, செல்வம், நட்பு போன்றவற்றை கொண்டுவரும் சின்னமாக கருதப்படுகிறது. சில கலாச்சாரங்களில் இது கருவுறுதலின் அடையாளமாக கருதப்படுகிறது. பண்டைய ரோமானியர்கள் தவளை வீட்டிற்குள் வந்தால் அவர்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. மேலும் இது நோய்களில் இருந்து விரைவில் குணமடைய உதவும்.

கோடாரி
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உலகின் பல இடங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வில் கோடரி சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய நாடுகள் பலவற்றிலும் மக்கள் கோடரியை தங்களின் அதிர்ஷ்ட சின்னமாக கருதி வைத்திருந்தனர்.

நாணயங்கள்
” செல்லும் வழியில் ஒரு நாணயத்தை கண்டால் உடனடியாக அதனை எடுத்துவிடு அது உங்களின் நாள் முழுவதும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்..எடுக்காமல் விட்டுவிட்டால் மனவருத்தம் ஏற்படும் ” என்று ஓர் மேற்கத்திய பழமொழி உள்ளது. ஒருவேளை நாணயம் கீழ்நோக்கிய படி கிடந்தால் அதனை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள். வளைந்த நாணயங்களோ அல்லது ஓட்டை விழுந்த நாணயங்களோ மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.

ஏணி
பல நூற்றாண்டுகளாக ஏணி அதிர்ஷ்டத்தின் அடையாளமாக இருந்தது பண்டைய கால எகிப்தியர்கள் தங்களின் கல்லறை மீது ஏணியை வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர், அதன்மூலம் அவர்கள் ஆன்மா சொர்க்கத்தை எளிதில் அடையும் என்று அவர்களால் நம்பப்பட்டது. மேலும் அவர்கள் பூமி வாழ்க்கை மீதிருக்கும் பற்றை குறைக்கவும் பயன்படுகிறது. சுவரின் மீது சாய்த்து வைத்திருக்கும் ஏணி துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். சுவரில் சாய்த்து வைத்திருக்கும் ஏணிக்கு கீழே செல்வது உங்களுக்கு துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுத்தம் கொடுப்பதில் இந்த ராசிக்காரங்கதான் கில்லாடிகளாம் உங்கள் ராசியும் இதுல இருக்கா?
Next articleஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா! அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க!