இந்த வார ராசி பலன்கள் (29-09-2017 முதல் 05-10-2017 வரை)

0
815

மேஷம்:

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினை உருவாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார எல்லா செயல்களும் சிறப்படையும்.

ரிஷபம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலைக்கு கனரக வாகனம் வாங்குவீர்கள். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பிரச்சினை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

மிதுனம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் வெளியூர் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.
29-09-2017 அன்று இரவு 10-27 மணி முதல் 02-10-2017 அன்று காலை 08-50 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

கடகம்:

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சலனம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.
02-10-2017 அன்று காலை 08-50 மணி முதல் 04-10-2017அன்று பகல் 03-45 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியடையும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
04-10-2017அன்று பகல் 03-45 மணி முதல் 06-10-2017 அன்று இரவு 07-31 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
கன்னி
கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் ஆசைகள் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

06-10-2017 அன்று இரவு 07-31 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

துலாம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் காரணமாக வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் மூலம் பண வரவு உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வணிகத்தில் முதலீடுகள் செய்வீர்கள். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் வெற்றியடையும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுளின் அருள் கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.. சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது.

மகரம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் நன்மை உண்டாகும் செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணங்கள் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் மேன்மையடையும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்

கும்பம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் கையிலெடுப்பவையெல்லாம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

மீனம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உஷ்ணத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் இருந்து பண வரவு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: