வாரிசு நடிகர் படம் டிராப் பின்னணியில் பிக் பாஸ் நடிகை?

0
394

பெரும் எதிர்பார்ப்புடன் உருவான வாரிசு நடிகர் படம் பிரச்சினையில் சிக்கியதற்கு பின்னணியில் பிக் பாஸ் நடிகை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரின் மகன் அறிமுகப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கினார். ரீமேக் படமான இது, ரிலீசாக வேண்டிய சமயத்தில் சிலப்பல காரணங்களால் கைவிடப்பட்டது.

திரும்பவும் படத்தை முதலில் இருந்து படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இயக்கம் சரி இல்லாததால் தான் தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரிஜினலில் வரும் நடிகையின் கதாபாத்திரத்தின் காட்சிகள் ரீமேக்கில் அதிகப்படுத்தப் பட்டுள்ளதாம்.

டம்மியான நாயகி: இதனால் நாயகியின் கதாபாத்திரம் டம்மியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் கதையையே மாற்றி விட்டதாக தயாரிப்பு தரப்பு கருதுகிறது. எனவே தான், படத்தை உள்ளது உள்ளபடி எடுக்க திரும்பவும் முதலில் இருந்து படமாக்க இருக்கின்றனர்.

பிக்பாஸ் நடிகை: இப்படத்தில் நடிகையில் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரபலமானவர். கதைப்படியும் அவருக்கு நடிகை கதாபாத்திரம் தான். ஏன் தமிழில் இவரது காட்சிகளை இயக்குநர் அதிகப்படுத்தினார் எனத் தெரியவில்லை.

ஆபாச நடிகர்: அதோடு படத்தில் கண் கூச வைக்கும் விதத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகமாக இருக்கிறதாம். முதல் படமே தன் மகனுக்கு ஆபாசப் பட நடிகர் என்ற பட்டத்தை வாங்கித் தந்து விடக் கூடாது என தந்தை நடிகர் கருதியிருக்கிறார். இதுவும் படம் டிராப் ஆனதற்கு ஒரு காரணம் ஆகும்.

இது தான் காரணம்: இப்படியே படம் வெளியானால் மகனின் இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் தான், படத்தை மீண்டும் எடுக்க அவர் சம்மதித்துள்ளார். கத்தி மேல் நடப்பது போன்று கதையை கவனமாக எடுக்கத் தெரிந்த ஒருவர் கையில் தர வேண்டும் என படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறதாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை! அதிர வைக்கும் பின்னணி தகவல்!
Next articleமாமியாரை அசிங்கப்படுத்திய நிஷா! மாமியார் கொடுத்த சரியான பதிலடி!