சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கிகள் அறிமுகமான கலகட்டடத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான மஹாலக்ஷ்மி. இவரது ஆங்கரிங் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தார்.
அரசி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர்.இறுதியாக , சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் பரப்பாக நடித்து வந்தார்.
மஹாலக்ஷ்மி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். படிப்பு முடிஞ்சதும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாசேர்ந்தார். அங்கே வேலை பார்த்துட்டிருக்கும்போதே சின்னத்திரை நடிக்கும் வாய்ப்புகிடைத்தது . அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
தனது மகன் பிறந்த முதல் நாளிலே அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் ஒரு வெளிநாட்டில் கொண்டாடணும்னு இவரும் இவரது கணவரும் முடிவுஎடுத்துள்ளார்களாம். முதல் பிறந்தநாளுக்கு பாங்காக் சென்றுள்ளார்கள். இரண்டாவது பிறந்தநாளை சிங்கப்பூரில் கொண்டாடினார்கள். மூன்றாவது பிறந்தநாளுக்கு மலேசியாவுக்கு போக பிளான் செய்துள்ளார்களாம்.மகனின் இருபது வயசில் இருபது நாடுகளை அவன் பார்த்திருக்கணுங்கிறது தங்களுடைய ஆசை என்று கூறியுள்ளார் மஹாலக்ஷ்மி.