வவுனியாவில் சிறுமியொருவர் கர்ப்பம்! மூடிமறைக்கும் வைத்தியசாலை… பொலிஸார் கண்டுகொள்ளாதது ஏன்?

0
299

வவுனியாவில் சிறுமியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள போதும், பொறுப்பான அதிகாரிகள் அதை கண்டும் காணாமலும் விட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் பெற்றோரும், அதிகாரிகளும் இந்த பாரதூரமான சம்பவத்தை மூடிமறைக்க முயல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பதினாறு வயதிற்கும் குறைவான வயதில் கருத்தரித்து, தற்போது நான்கரை மாத கர்ப்பிணியாக சிறுமியொருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த சிறுமியொருவரே துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். 2002.05.16ம் திகதி பிறந்துள்ள இந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட அசாதாரண மாற்றத்தை தொடர்ந்து, கடந்த வாரம் வவுனியா வைத்தியசாலையில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். அப்போது அவர் 22 வாரங்கள் கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்தது.

தற்போது 16 வயதும் 2 மாதங்களும் பூர்த்தியாகியுள்ளார். வைத்தியசாலையில் வழங்கப்பட்ட கர்ப்பவதி குறிப்பேட்டில் வரும் 11ம் மாதம் அவரது பிரசவ திகதி குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி நோக்கினால், இந்த வருட ஆரம்பத்தில்- அவரது பதினைந்தாவது வயதில்- கர்ப்பம் தரித்திருக்கிறார்.

குறித்த சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் தற்போது மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிவதாக பெற்றோரால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது குறித்த முறையான விசாரணைகளோ, உறுதிப்படுத்தல்களோ நடக்கவில்லை.

16வயதை பூர்த்தி செய்யாமல் அந்த சிறுமி கர்ப்பம் தரித்திருந்த போதும், வவுனியா வைத்தியசாலை அதிகாரிகளால் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிற்கோ, பொலிசாருக்கோ சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.

சிறுமியின் விவகாரத்தை வைத்தியசாலை ஏன் மூடி மறைக்கிறது? இதுவரை ஏன் உரிய அதிகாரிகளிற்கு அறிவிக்கப்படவில்லை? இந்த மௌனத்தின் பின்னால், சிறுமியின் எதிர்காலம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: