எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கமாட்டேங்குதே என்று வருத்தமா! இவற்றை வீட்டில் செய்து பாருங்க பலன் கிடைக்கும்!

0
10177

எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கமாட்டேங்குதே என்று வருத்தமா! இவற்றை வீட்டில் செய்து பாருங்க ஆச்சரியமான பலன் கிடைக்கும்!

வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிரமமான காரியம் பணத்தை சேமிப்பதாகும். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் பணத்தை சேமிக்கவே விரும்புவார்கள். பணக்காரார்களே விரும்பும்போது ஏழைகள் விரும்ப மாட்டார்களா? ஆனால் அவர்களால் பணத்தை சேமிக்க முடியாது. பணம் சேமிப்பது என்பதை விட கடன் பிரச்சினையும் அவர்களை துரத்தும்.

வருமானம் குறைவாக உள்ளவர்கள் பணத்தை சேமிக்க சிரமப்படுவதில் ஆச்சரியமில்லை, ஆனால் போதுமான அளவு சம்பாதிப்பவர்கள் கூட பணத்தை சேமிக்க முடியாமல் கடனாளியாவதை நம் அன்றாட வாழ்வில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்கு உங்கள் அலட்சியம் ஒரு காரணமாக இருந்தாலும் நீங்கள் வீட்டில் வைத்துள்ள சில பொருட்களும் காரணமாக இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் வீட்டில் வைக்கக்கூடாது பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பால் தொடர்பான எந்த பொருளும் வீட்டில் திறந்த நிலையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பால் சூடாக இருந்தால் கூட பிரிட்ஜில் வைப்பதற்கு முன் மெல்லிய மூடியிட்டு அதன் பின் உள்ளே வையுங்கள்.

காலணிகள் மற்றும் சாக்ஸுகள் பூஜையறை அருகில் இல்லாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். அதேசமயம் வீட்டிற்குள் ஷூ அணிந்து செல்வதை தவிருங்கள். வீட்டிற்க்கு வெளியே காலணிகள் வைப்பதற்கென ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

நீங்கள் வீட்டிற்குள் வைக்கும் செடிகள் உங்களுக்கு ஆக்சிஜனை மட்டும் வழங்குவதில்லை. அவை நேர்மறை சக்திகளை உங்கள் வீட்டிற்குள் பரவச்செய்து செல்வத்தின் வரவை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தரும் சில உட்புற செடிகளை வாங்கி உங்கள் வீட்டிற்குள் வைக்கவும்.

முட்களுடைய தாவரங்களை உங்கள் வீட்டிற்குள் ஒருபோதும் வைக்காதீர்கள். ஏனெனில் இவை உங்கள் வீட்டில் குழப்பத்தையும், வறுமையையும் ஏற்படுத்தும். ஒருவேளை அவசியப்பட்டால் இதனை உங்கள் வீட்டிற்கு வெளியில் மட்டும் வைத்து கொள்ளுங்கள்.

துளசி செடி எவ்வளவு புனிதமானது என்று நாம் நன்கு அறிவோம். இதனை தொடர்ந்து வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், செழிப்பையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் வீட்டில் தெற்கு மூலையில் துளசி இருந்தால் அது உங்கள் குடும்பத்தின் நிம்மதியை குலைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? எனவே தெற்கு மூலையில் துளசி வைப்பதையும், தெற்கில் இருக்கும் துளசி செடியை வணகுவதையும் தவிருங்கள்

அரசமரம் அது வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும், அதன் புனித்துவத்திற்கும் மிகவும் புகழ்பெற்றது, ஆனால் அது சில இடங்களில் இருப்பது உங்கள் வாழ்க்கையில் பல தீமைகளை உண்டாக்கும். கிழக்கு மூலையில் இருக்கும் அரசமரத்தை வணங்குவது உங்கள் வாழ்க்கையில் பயத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கும்.

உங்கள் இல்லத்தில் இருக்கும் வாஸ்து தோஷத்தால் கூட உங்களால் பணத்தை சேமிக்க இயலாமல் போகலாம். எனவே வீட்டிற்கு குடிபோகும் முன் கணபதி பூஜை செய்வது நல்லது. மற்றொரு எளிய வழி கொஞ்சம் சிவப்பு சந்தனம், முந்திரி மற்றும் ஒரு சிறிய கல்லை எடுத்துக்கொண்டு அதனை ஒரு சிவப்பு துணியில் கட்டிக்கொள்ளவும். இதனை வீட்டின் வடக்கு மூலையில் வைத்துவிட்டு செவ்வாய் கிழமையில் வழிபட்டால் உங்கள் இல்லத்தில் இருக்கும் எதிற்மறை சக்திகள் அனைத்தும் விலகிவிடும்.

புது வீடு கட்டும்போது அதற்கு நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். செலவை குறைக்க பழைய வீடுகளில் இருக்கும் கதவுகள் ஜன்னல்கள் போன்றவற்றை உபயோகிப்பது உங்களுக்கு வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் உபயோகிக்கும் பூட்டு புதியதாக இருக்க வேண்டும்.

முன்கதவு வீட்டிற்குள் நுழையும்போது எப்பொழுதும் உங்கள் பத்தாம் கதவில் இடிக்காத படி பார்த்து கொள்ளுங்கள். அதேபோல முன்கதவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தொங்க விடுவது உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அழைத்துவரும்.

விநாயகர் அனைத்து வீடுகளிலும் விநாயகரின் சிலை இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் வினை தீர்க்கும் விநாயகன் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை பார்த்துக்கொள்வார். விநாயகரை அடிக்கடி சுத்தப்படுத்தி தினமும் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுங்கள். மீதியை அவர் பார்த்து கொள்வார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை!
Next articleஇன்று வீண் கவலைகள் குழப்பங்கள் ஏற்படும் ராசிக்காரர்கள் நீங்க தான்! இன்றைய ராசிப்பலன் – 18.02.2019 !