வயிற்று புற்றுநோய் பற்றிய உண்மைகள்! சாதாரண அறிகுறிகளாக இருக்குமாம்!

0
871

புற்றுநோய்களில் நிறைய வகைகள் உள்ளது. அதில் மிகவும் ஆபத்தானது வயிற்று புற்றுநோயே.

ஏனெனில் வயிற்று புற்றுநோய் இருந்தால், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெரியாது. அப்படியே அறிகுறிகள் தெரிந்தாலும், அது சாதாரணமாக தென்படும்.

வயிற்று புற்றுநோய் செல்கள் ஆரம்பத்தில் இரைப்பையின் சுவற்றில் தான் ஆரம்பமாகும். சில சமயங்களில் குடல் அழற்சி கூட, வயிற்றுப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.

வயிற்று புற்றுநோய் குறித்த சில உண்மைகள்!

புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ள சமயத்தில் வயிற்றுப் புண்ணால் பிரச்சனையை சந்திக்க நேரிட்டால், அவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

வயிற்றில் உருவாகும் புற்றுநோய் செல்கள் அப்படியே உடல் முழுவதும் பரவி விடும். அதனால் இது ஆபத்தான புற்றுநோயாக கருதப்படுகிறது. எனவே இதற்கு சிகிச்சை அளிப்பதும் கடினமாகிவிடும்.

செரிமான மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள ஆரோக்கியமான செல்களானது கட்டுப்பாடு இல்லாமல் வளரும் போது, அது கட்டிகளாக மாறி, புற்றுநோயை உண்டாக்கும்.

இச்செயல்முறை மெதுவாக நடைபெறுவதால், வயிற்றுப் புற்றுநோய் இருப்பதை பல வருடங்கள் அறிய முடியாது.

ஒருவருக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கு மரபணு காரணிகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே ஒரு குடும்பத்தில் யாருக்கேனும் வயிற்று புற்றுநோய் இருந்தால், அது அக்குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது.

வயிற்றில் உள்ள அசாதாரண திசு வளர்ச்சி, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவைகளும் வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப காலத்தில் உணவுகளை உண்ணும் போது விழுங்குவதில் சிரமத்தை சந்திப்பது மற்றும் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவது போன்ற பிரச்சனைகளை ஏற்படும்.

உடல் எடை திடீரென்று குறைவது மற்றும் வயிற்று உப்புசமாக இருப்பது போன்றவையும் வயிற்று புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

பல நாட்களாக வாந்தி வந்தவாறு இருந்தால், அதுவும் ரத்தம் கலந்த வாந்தி அல்லது ரத்தம் கலந்த மலம் வெளியேறினால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: