உடல் எடையைக் குறைக்க தினமும் இதனை சாப்பிட்டாலே போதும்! Kala Namak

0
6544

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ‘காலா நமக்’ எனும் கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.

இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதிகளிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. இந்த உப்பு ‘காலா நமக்’ என்றும், கருப்பு உப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த உப்பும் சோடியம் குளோரைடு என்பதால், வட இந்தியாவில் இந்த உப்பையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த உப்பின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இங்கு காண்போம்.

மூட்டு வலி, தசை பிடிப்பு உள்ளவர்கள் கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர், அதனை கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டி கொண்டு வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சமையலில் கருப்பு உப்பைச் சேர்த்துக் கொண்டால் நல்ல பயன் தரும்.

ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்தரவினால் மூச்சு விடுவதில் சிரமப்படுபவர்கள், கருப்பு உப்பினை தங்களது இன்ஹேலரில் பொடித்துப் போட்டு சுவாசித்தால் மூச்சுத்திணறல் இருக்காது.

உணவில் கருப்பு உப்பை பயன்படுத்தினால், உடல் எடையை வெகுவாக குறைக்கலாம். மேலும், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாகவும் இது பயன்படும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, இஞ்சி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து பருகினால் குணமடைவர்.

கருப்பு உப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை மட்டுப்படுத்துவதோடு, சீரான ரத்த ஓட்டத்தையும் உடலுக்கு அளிக்கிறது.

கருப்பு உப்பில் ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. மேலும், உணவை ஜீரணிக்கவும் உதவுகிறது.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு உப்பை உணவுடன் சேர்த்து உட்கொண்டால், நல்ல தூக்கம் வரும்.

கருப்பு உப்பை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், முடி கொட்டுதல் நிற்கும். மேலும், முடிக்கு கருமை நிறத்தை அளிப்பதோடு, வெடிப்பையும் நிறுத்தும்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை பெற, தக்காளி பழச்சாறுடன் கருப்பு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

சருமத்தில் வெடிப்புகள் வராமல் இருக்கவும், வழவழப்பாக இருக்கவும் குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளிக்க வேண்டும்.

முட்டையின் மணம் வீசும் கருப்பு உப்பில், முட்டையின் குணங்களும் உள்ளன. எனவே, இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: