வடக்கு- கிழக்கில் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!

0
529

வடக்கு- கிழக்கில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களில் ஸ்தாபிப்பதற்கு செலவாகும் நிதியை இராணுவத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தனியார் காணிகளில் 522 ஏக்கரினை விடுவிப்பதற்கு இலங்கை இராணுவம் இணக்கம் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் காணிகளை விடுவிக்கும் போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாமினை வேறு இடத்தில் மீள ஸ்தாபிப்பதற்கு 866.71 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்தொகையை பெற்றுக் கொடுப்பதற்கே தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Previous articleமலேசியாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்
Next article3 மாதங்கள் காத்திருந்து பெண்னை பழி வாங்கிய பாம்பு! உண்மைச் சம்பவம்