வசமாக சிக்கிக் கொண்ட இரு பெண்கள்! யாழில் விசேட சுற்றிவளைப்பு!

0
326

யாழில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் இருவரும் வசமாக சிக்கியுள்ளனர்.

இதன்போது நெல்லியடி பொலிஸார், 115 லீற்றர் கோடா மற்றும் 10 லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை இந்த சுற்றிவளைப்பின் போது ஆணொருவர் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: