பிக்பஸ் நிகழ்ச்சியில் கவின் இருந்த போது அவரது நண்பர் பிரதீப் ப்ரீஸ் டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கவின் தவறுகளுக்கெல்லாம் இந்த அடி என்று கூறி மற்ற போட்டியார்கள் முன்னிலையில் கவின் கன்னத்தில் பளார் என்று அரைந்தார். அப்போது, நீ ஒரு வேலை டைட்டில் வென்றுவிட்டால் ஃபைனலில் இந்த அடியை நன் திருப்பி வாங்கிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
ஆனால், அதற்குள் கவின் பிக்பாஸ் அறிவித்த ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் தற்போது அவரது நண்பர் பிரதீப் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், ” ஒரு வேளை லொஸ்லியா பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றால், ஃபைனல் மேடையில் கவினுக்கு பதிலாக லொஸ்லியாவிடம் இருந்து நான் அரை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட லொஸ்லியா ஆர்மிஸ் நிச்சயம் நண்பா.. எங்களால் முடிந்தவற்றை நங்கள் செய்கிறோம் என கூறி வருகின்றனர்.