லாஃப்ஸ் கேஸ் விலை விரைவில் குறைக்கப்படும்!

0

லாஃப்ஸ் கேஸ் விலை விரைவில் குறைக்கப்படும்!

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை குறைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது விலைத் திருத்தத்தை மேற்கொள்வதாகவும், லாஃப்ஸ் கேஸின் விலை மற்றும் விநியோக முறை தொடர்பில் ஏதேனும் வாடிக்கையாளர் முறைப்பாடுகள் இருப்பின், அது தொடர்பில் ஆராய பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனம் எரிவாயுவின் விலையை குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தை! வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு!
Next articleஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தொடர்பாக வெளியான தகவல்!