லலிதா ஜீவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த முருகனை பற்றி அதிர வைக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இந்நிலையில் இந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார்.
இந்நிலையில் இவர்களின் பிடியில் சிக்கிய நடிகைகளை முருகன், சுரேஷ் ஆகிய இரண்டு பேரையும் கொள்ளையர்கள் என்று தெரியாமல், நகைக்கடை அதிபர் என்று நம்பி நகையை பரிசாக பெற்று அவர்களிடம் பழகிய நடிகைகளின் லிஸ்டை காவல்துறையினர் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல் படத்தில் நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் கொடுத்த நகைகளை பரிசாக பெற்றது பற்றி விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் கொள்ளையர்கள் என்று தெரியாமல் முருகன், சுரேஷிடம் பழகிய தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் தற்போது பதட்டத்தில் உள்ளனர். விசாரணையில் அந்த நடிகை, இந்த நடிகை என மாறி மாறி சொல்வதால் போலீசாருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த நடிகைகள் என தீவிரமாக விசாரிப்பதுடன், சம்பந்தப்பட்ட நடிகைகளிடமும் நகைகளை பெற்றீர்களா என்று விசாரிக்கும்போது அவன் சொன்னது உண்மையா என்று தெரியவரும் என தனிப்படை போலீஸ்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
போலீஸாரிடம் பிடிபட்ட பிறகு முருகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை நெருங்கிப்பழகும் நடிகைகளிடம் முருகன் மறைத்து அவர்களுடன் நெருக்கத்தில் இருந்துள்ளான். போலீஸ் பிடியில் முருகன் சிக்கி, அவனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ள அவனுடன் நெருக்கத்தில் இருந்த நடிகைகள், தங்களுக்கும் முருகனிடம் இருந்து செக்ஸ் நோய் பரவி இருக்குமோ என பதறியடித்து மருத்துவமனைக்கு சென்று எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.