லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை!

0
303

லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Brixton பகுதியில் இருக்கும் 1 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் 38 வயது மதிக்கத்தக்க Samantha Clarke என்ற பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், Samantha Clarke கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு Oxfordshire பகுதியின் Henley-on-Thames-ல் இருக்கும் ஹோட்டலில் மேனேஜராக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய மகனின் 14-வது பிறந்த நாளை கடந்த 9-ஆம் திகதி உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

மகிழ்ச்சியாக காணப்பட்ட இவர் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் உள்ளூர் நேரப்படி 6.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் 20 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவ தினத்தன்று மூன்று பேர் Samantha Clarke-ன் வீட்டில் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரை குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் தற்போது முதல் கட்ட விசாரணை தான் முடிந்துள்ளது, தொடர் விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

கணவர் கூறுகையில், அன்பானவள், மகன் தான் அவளுக்கு எல்லாமே, ஆனால் இந்த சம்பவம் எதனால் நடந்தது எதற்கு நடந்தது என்பது குறித்து ஒன்றுமே புரியவில்லை என்று புலம்பியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் சமீபகாலமாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவரைத் தொடர்ந்து இந்த ஆண்டில் தற்போது வரை மட்டும் 59 பேர் கத்தியால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: