லண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி! வைரலாகும் காட்சிகள்!

0
488

பிரித்தானியா சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவில் சர்ச்சைக்குரிய யுவதி ஒருவர் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் பிரித்தானியா சென்றிருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியுடனான குழுவுடன் சென்ற இளம் யுவதி ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

கிஹானி வீரசிங்க என்ற 33 வயதான பெண் தொடர்பிலேயே பேசப்பட்டு வருகின்றது.

இந்த பெண் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்ற பிரதிநிதி என குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அரச தலைவர்கள் மாநாட்டில் முன்னர் இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் தான் கலந்து கொண்டதாகவும், வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் எப்படி லண்டன் சென்ற பிரதிநிதிகள் குழுவில் இணைந்தார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இளம் பெண் ஒருவர் அடிக்கடி பிரசன்னமாகி இருந்தமையுடன், அது சர்சைக்குரிய விடயமாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: