லண்டனில் ஓடும் பேருந்தில் 12 வயது சிறுமிக்கு 6 ஆண்களால் நடந்த கொடுமை! தாயின் வேதனை பகிர்வு!

0

லண்டனை சேர்ந்த 12 வயது சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து பர்க்கிங்ஹாம் நகருக்கு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது, பேருந்தில் ஏறிய 20, 30 வயதுடைய 6 ஆண்கள் ஒன்று சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். பேருந்தில் அமர்வதற்கான இடம் இருந்தபோதும் குறித்த ஆண்கள் சிறுமிக்கு அருகில் வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்துள்ள மனுவில், இப்படி ஒரு சம்பவம் எனது மகளுக்கு நடந்தபோது அவளது அருகில் நான் இல்லாமல் போனது வேதனையளிக்கிறது.

அவள் என்னை தொலைபேசியில் அழைத்து நடந்தவை குறித்து தெரிவித்தபோது எதையும் விவரிக்க முடியாமல் இருந்தேன்.

இந்த சம்பவத்தால் எனது மகள் நடுக்கத்தில் இருக்கிறாள், இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தும் அவர்கள் எங்களுடன் தொலைபேசியில் பேசினார்களே தவிர இதுவரை எங்களை வந்து சந்தத்து எதனையும் விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குறித்த நபர்கள் குறித்து அறிந்த எங்களிடம் புகார் தெரிவிக்கலாம் என West Midlands பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த அப்பா! அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம்!
Next articleதிருமணமாகி 14 ஆண்டுகளாக கர்ப்பமாகாத மனைவி! கோபத்தில் எமனாக மாறிய கணவன்!