ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை

0

ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை

ரிஷபம்: அஷ்டமத்தில் நின்று உங்களை ஆட்டிப்படைத்த சனி பகவான் 27.12.2020 முதல் 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்வார். பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளிலிருந்து மீள்வீர்கள். கடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கை நிறைய சம்பாதிப்பீர்கள். எந்த வேலையிலும் நிரந்தரமாக நிற்காமல் சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் கணவரின் ஒத்துழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் ஆதாயம் கூடும். அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கடினமான வேலைகளையும் சாமர்த்தியமாகச் செய்து முடித்து எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியையும் செல்வவளத்தையும் தருவதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை
Next articleமிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !