உங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி இருக்கு தெரியுமா!! ரகசிய உண்மைகள்!

0

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் காதல் பலன் எப்படி இருக்கும் என்பதை குறித்து காணலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் எதிலும் திருப்தி அடையாதவராக இருப்பார்கள். இவர்களுக்கு காதலிக்கும் குணம் இருந்தாலும் அவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் உண்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணம் உடையவர்கள். இவர்களுக்கு காதல் ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் தான் கவர்வார்கள், ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. ஆனால் இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அதிக அன்பு செலுத்துவார்கள். இந்த ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் தங்களின் சுய மரியாதையை இழக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் இவர்களுக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி மட்டுமே நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் மிக்கவர்கள்.. காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவார்கள். இந்த கன்னி ராசி உள்ளவர்களுக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவார்கள். நல்ல குணங்களை கொண்ட இவர்கள், பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் காதலில் வெற்றி அடையாமல் விட மாட்டார்கள். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது வாழ்நாட்களை அதிகமாக நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை இருக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் நிறைய கற்பனை செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்த பின் காதலை வெளிப்படுத்துவது வெற்றியை கொடுக்கும்.

மீனம்

மீன ராசிகாரர்கள் அன்பு மற்றும் பொறுமை குணங்கள் கொண்டவராக திகழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி நிலை பெற்றிருக்கும். இவர்கள் இயற்கையை அதிகமாக விரும்புவார்கள். இவர்கள் தனது ரகசிய வாழ்வை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து விடயங்களிலும் யோசித்து காரியத்தை கட்சிதமாக முடித்து விடுவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையின் டாப் பணக்காரர்களின் பட்டியலில் தமிழர்களும்!! யார் முதலிடம் தெரியுமா?
Next articleயாருக்கு இரண்டு திருமணம் அமையும்!