ராகவா லாரன்ஸ் நடிப்பில் “ரங்கஸ்தலம்” தமிழ் ரீமேக்!

0

டோலிவுட்டில் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படம் அமோக வரவேற்பை வசூல் சாதனை படைத்தது. சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் ராம் சரண் , சமந்தா , ஆதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் லாரன்ஸ் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் தானே நடிக்க முடிவெடுத்துள்ள ராகவா லாரன்ஸ் லிங்குசாமியை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

ராகவா லாரன்ஸ் தற்போது இந்தியில் காஞ்சனா 2 படத்தின் ரீமேக் இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அப்படத்தின் வேலைகள் முடிந்தவுடன் ரங்கஸ்தலம் ரீமேக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடிய விரையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேசுன ஒத்த பைசாவ கொடுக்கல விஜய் டிவி-யை கிழித்து தொங்கவிட்ட மீரா!
Next articleகுழந்தை வேண்டாம்! ஆனால் அது வேண்டும் – எது சரியான நேரம்! கருமுட்டை முழுமையான வளர்ச்சி !