ரத்த அழுத்த நோய் அதனால் ஏற்படும் மயக்கமும், தலை சுத்தலும் உடனே குணமாகும்!

0
1618

ரத்த அழுத்த நோய் அதனால் ஏற்படும் மயக்கமும், தலை சுத்தலும் உடனே குணமாகும்!

ரத்த அழுத்த நோய்

நான்கு பன்னீர் ரோஜா பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா காய்ச்சி, அரை டம்ளரா சுண்டியதும் இறக்கி காலையில் வெறும் வயிற்றில் அதனைக் குடித்து வருதல் அல்லது அரை டம்ளர் வாழைத்தண்டு சாறு, அரை டம்ளர் மோர் இரண்டையும் கலந்து 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வருதல் அல்லது ஒரு கரண்டி அளவுக்கு வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் அல்லது 50 கிராம் திரிபலா (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்), 50 கிராம் திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி) மற்றும் 100 கிராம் நாட்டு சர்க்கரை சேர்த்து காலை மாலை இருவேளையிலும் சாப்பிட்டு வரும் போது இரத்த அழுத்தம் குணமடைவதுடன்,

ரத்த அழுத்தத்தால வரும் தலைசுற்றல், மயக்கம் போன்றன ஏற்பட்டு படுத்த படுக்கையாக்கி விடும் போது ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை ஒரு பாத்திரத்தில போட்டு நன்கு வறுத்து தேன் பதத்திற்கு; பாகுமாதிரி வந்ததும், 3 இன்ச் அளவுள்ள இஞ்சித்துண்டை நன்கு அரைத்து வடிகட்டி, ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து அதனுடன் 25 கிராம் காஞ்ச திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து, அரை டம்ளரானதும் இறக்கி வைத்து நன்கு ஆறியதும் காலை மாலை என மூன்று நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டு தண்ணியையும் குடித்து வரும் போது மயக்கம் தெளிந்து, இரத்த அழுத்தமும் குணமடையும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழுப்பு குறைவடைந்து உடல் பருமன் குறைவதற்கு உதவும் இயற்கை மருத்துவ வழிகள்!
Next articleகொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது ஏன் தெரியுமா? அவற்றிற்கு அர்த்தம் தெரியுமா?