ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சந்திரிகா!

0

கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஜனாதிபதியாக்கிய சமரில் முக்கிய வகிபாகத்தை வகித்த சந்திரிகா, தற்போது மீண்டும் களமிறங்கியிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவோர் பிரதமர் என்ற நிலை இருக்கும்போது, மைத்திரி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சந்திரிகா இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் நால்வருடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார் என்றும், தற்போது தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.

அதேவேளை, மைத்திரி – மஹிந்த பக்கமுள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திரிகா அம்மையார் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார். சந்திரிகாவின் இப்பிரவேசமானது மைத்திரி – மஹிந்த கூட்டணியை கடும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழர் தாயக பகுதியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள்!
Next articleகுடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது!