ரஜினிகாந்த் பெற்றோரின் மணிமண்டபம் திருச்சியில் திறப்பு!

0

நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோருக்கு திருச்சியில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் திறந்து வைத்தார்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் புஷ்பராஜ் (50). ரஜினி மக்கள் மன்றத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகியான இவர், திருச்சி அருகே குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில், 1,860 சதுர அடி பரப்பளவில் ரஜினிகாந்தின் பெற்றோர் ரானோஜிராவ் – ராம்பாய் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார்.

இதில், ரஜினி பெற்றோரின் மார்பளவு வெண்கலச் சிலைகள், இரண்டரை அடி உயர சிவலிங்கம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மணிமண்டபத்தை, ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் நேற்று (25ம் திகதி) திறந்து வைத்து, பெற்றோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், ரஜினியின் உறவினர்கள், ஸ்டாலின் புஷ்பராஜ் குடும்பத்தினர், ரஜினி மக்கள் மன்ற கர்நாடக மாநிலத் தலைவர் சி.எஸ்.சந்திரகாந்த், மாநிலச் செயலாளர் எம்.பி.வெங்கடேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉலகத்தில் இப்படியொரு மருத்துவரா! எத்தனை தடவை அவதானித்தாலும் நம்பமுடியாத அதிசயம்!
Next articleசிறுமியையும் விட்டு வைக்காத திருநாவுக்கரசு! பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முதன் முறையாக வெளியிட்ட ஆடியோ!