ரசிகர்கள் கவலை! பிக்பாஸ் ஐஸ்வரியாவிற்காக நடிகர் சிம்பு செய்த செயல்!

0
303

நல்லா பட வாய்ப்பு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் சிம்பு ஏன் இப்படி செய்கிறார் என்றே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அன்பாவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்சனைக்கு பிறகு சிம்புவின் கெரியர் என்ன ஆகுமோ என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர். அந்த பிரச்சனை இருக்க சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார். செக்கச் சிவந்த வானம் படத்தை பார்க்கும் அனைவரும் சிம்புவின் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சென்றாயன் கூறிய பதில்
பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற சென்றாயன் ”சிம்புவுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என்றால் அது ஐஸ்வர்யா தான் என்றும், அவரின் அடுத்த படத்தில் அவர் தான் ஹீரோயின்” என்றும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஐஸ்வர்யாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வெளியே ஐஸ்வர்யாவுக்கு ரொம்ப நல்ல பெயர் இருப்பதாக சென்றாயனும் பொய் சொன்னார்.

தமிழக மக்களுக்கு பிடிக்காத ஐஸ்
தமிழக மக்களில் பலருக்கும் பிடிக்காதவர் ஐஸ்வர்யா. அவரை தினமும் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். இது சிம்புவுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் ஐஸ்வர்யாவை பிடிக்கும் என்று அவர் ஏன் கூறினார் என தெரியவில்லை. தற்போது தான் அவருக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் தேவையில்லாமல் அதை கெடுத்துக் கொள்கிறாரே என்பது தான் ரசிகர்களின் கவலை.

ரசிகர்கள் வேண்டுகோள்
வேண்டாம் சிம்பு அவர்களே, உங்களுக்கு தமிழகத்தில் அமோக ஆதரவு உள்ளது. ஐஸ்வர்யாவை ஆதரித்து அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். சிம்புவின் ரசிகர்கள் செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்துவிட்டு அவரை பாராட்டியுள்ளனர். இந்த நேரத்தில் சிம்பு இப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஐஸ்வர்யா வெளியே வந்த பிறகு அவருடன் சேர்ந்து நீங்கள் நடித்தால் நிச்சயம் உங்களின் கெரியர் பாதிக்கப்படும் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். மெதுவாக மக்கள் மனதில் இடம் பிடித்து வரும் சிம்பு ஐஸ்வர்யாவுடன் நடிக்காமல் இருப்பது அவருக்கு நல்லது. உங்களின் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதே சிம்பு ரசிகர்கள் மற்றும் பிறரின் அறிவுரையாக உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: