எதிர்கால ரகசியத்தை தெரிஞ்சிக்க இதுல ஒன்றை மட்டும் சூஸ் பண்ணுங்க!

0
5307

நாளை என்ன நடக்கப் போகிறது என்பது இன்றே தெரிந்து விட்டால் இரண்டே விஷயங்கள் தான் நடக்க வாய்ப்புள்ளது. ஒன்று உங்கள் வெற்றியின் மீதான சுவாரஸ்யம் குறைந்துப் போகும். அல்ல தோல்வியின் மீது அதீத அச்சம் தொற்றிக் கொள்ளும்.

நாம் ஒன்றும் டைம் மெஷினில் பயணித்து எதையும் கண்டறிய போவதில்லை. அதுவரை, ஊர்ஜிதமாக நூறு சதவிதம் நாளை என்ன நடக்கும் என்பதை கூறிவிட முடியாது. ஆனால், ஒருவரின் ஆற்றல், செயல் குறித்து அவரது எதிர்காலம் எப்படி அமையும் என்பதை நம்மால் அறிய முடியும். இது ஒரு சிறிய பர்சனாலிட்டி டெஸ்ட் தான். இந்த ஆறு பண்டையக் கால எழுத்து வடிவங்களில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம், அவருக்காக அவரது எதிர்காலத்தில் காத்திருப்பவை என்ன என்பதை அறிந்துக் கொள்ளலாம்…!

இந்த பண்டையக் கால எழுத்து வடிவம் பாதுகாப்பு, நிரந்திரம், செழிப்பு மற்றும் புதியதாக வரவிருக்கும் செல்வத்தை குறிக்கிறது. நீங்கள் இதை தேர்வு செய்திருந்தால்… இது நாள் வரை விதைத்த கடின உழைப்புக்கான நல்ல பிரதிபலனை நீங்கள் அறுவடை செய்யப் போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புரிதல் நிலைக்கு நீங்கள் வருவீர்கள். உங்கள் வாழ்க்கை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் மாறும்.

இந்த பண்டையக் கால எழுத்து வடிவம் வேகம், மாற்றம் மற்றும் சுதந்திரத்தை குறிக்கிறது. நீங்கள் இதை தேர்வு செய்திருந்தால்… இது நாள் வரை உங்கள் வாழ்வில் நீங்கள் காணாத சிறந்த மாற்றம் வருங்காலத்தில் காண்பீர்கள். மந்தமாக வாழ்க்கை நகர்கிறது என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் வாழ்க்கை சூடுப்பிடிக்க துவங்கும். அதை நீங்கள் ரசித்து ஏற்பீர்கள். புதிய வாய்ப்புகள், புதிய இடம், புதிய அனுபவம் கற்பீர்கள்.

இந்த சக்தி வாய்ந்த பண்டையக் கால எழுத்து வடிவம் வெற்றி, சக்தி மற்றும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை குறிக்கிறது. நீங்கள் இதை தேர்வு செய்திருந்தால்… உங்கள் நீண்ட நாள் கனவுகள் கனியத் துவங்கும் ஆன்மீக ரீதியாக, உணர்ச்சி ரீதியாக உங்களுக்கு அனைத்தும் சிறந்து நடக்கும். உங்களை சுற்றி இருந்த சர்ச்சையான விஷயங்களில் நீங்கள் எடுத்த முடிவுகள் சரியாக அமையும்.

இந்த பண்டையக் கால எழுத்து வடிவம் சில சிக்கல்களில் மாட்ட வாய்ப்பிருப்பதை குறிக்கிறது. நீங்கள் இதை தேர்வு செய்திருந்தால்… வாழ்வில் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. அதே சமயத்தில் உங்களை பாதுகாக்கும் சிறந்த சக்தியையும் நீங்கள் உணர்வீர்கள். ஒரு பெரும் புயலில் சிக்கி இருந்தாலும், நீங்கள் பயணிக்கும் அந்த சின்னஞ்சிறு படகு அனைத்து தடைகளை தாண்டி உங்களை நல்லப்படியாக கரைசேர்க்கும்.

இந்த பண்டையக் கால எழுத்து வடிவம் தந்திரமானது. இது நீங்கள் பெறவிருப்பதையும், தரவிருப்பதையும் குறிக்கிறது. அதாவது பொருளோ, அறிவோ, உதவியோ உங்களிடம் இருப்பதை நீங்கள் உங்களை சுற்றி இருக்கும் நபர்களுடன் பகிரவும், உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நீங்கள் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதை, புதிய கதவுகள் திறப்பதை நீங்கள் அனுபவிக்கலாம். மற்றவர்களுக்கு நீங்கள் உதவும் மனமும், உங்கள் கனிவான மனமும் தான் இதற்கு எல்லாம் காரணமாக அமையும்.

இந்த பண்டையக் கால எழுத்து வடிவம் அற்புதமானது. இது ஆன்மீக (அ) உணர்ச்சிமிக்க பயணத்தை, வளர்ச்சியை குறிக்கிறது. நீங்கள் இதை தேர்வு செய்திருந்தால்… உங்கள் வாழ்வில் நல்ல வளர்ச்சியும், புதிய துவக்கங்களையும் நீங்கள் காண விருப்பதை இது விளக்குகிறது. நீண்ட நாள் சோகத்திற்கு / இழப்பிற்கு பிறகு நீங்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கை பாகத்தை காண்பீர்கள். உங்கள் வாழ்வில் சிறந்தவை நடக்கும். காதல், எனர்ஜி, மகிழ்ச்சி போன்றவை உங்களுக்காக காத்திருக்கின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: