யாழ்.மாவட்ட நா.உறுப்பினர்! புதிய அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார்!

0

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சராக தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார்.

பொரள்ளையில் உள்ள மீள்குடியேற்ற அமைச்சில் இன்று அவரது கடமைகளை பொறுப்பேற்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை கடந்த சனிக்கிழமை கலைக்கப்பட்ட தோடு நேற்று முன்தினம் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து டி.எம். சுவாமிநாதனிடமிருந்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு பறிக்கப்பட்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாம் இதனை புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கூட செய்யவில்லை! ஆனால் ரணில்!
Next articleசபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்டமா அதிபர்!பிரதமர் மாற்றம்!