யாழ் இளைஞர்கள் அமெரிக்கா செல்ல முயற்சித்த போது ஏற்பட்ட பரிதாபம்!

0
323

அமெரிக்கா செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான ஈக்குவாடோர் விசா பயன்படுத்தி அந்நாட்டின் ஊடாக அமெரிக்கா செல்ல முயற்சித்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது பத்தாயிரம் ரூபா மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் இரு சரீர பிணையில் விடுவிப்பதற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த தனுஷன் ராஜசிங்கம் மற்றும் லெனின் குமாரசுவாமி என்றபவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா நோக்கி மோசடியான முறையில் செல்வதற்காக சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களின் மோசடி தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: