யாழ்ப்பாண கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்! 2700 வருடத்திற்கு முந்திய தமிழினம்!

0

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் 2700 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் பாரியளவு பெறுமதியான வர்த்தக நிலையம் ஒன்று காணப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி பேராசிரியர் எஸ்.புஷ்பரத்னம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நேற்று நிகழ்த்திய உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதற்கமைய 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த காலப்பகுதியில் தென்னிந்தியாவுடன் மிகவும் நெருக்கமான வர்த்தக தொடர்புகள் காணப்பட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கு இடையே கடல் மூலம் வர்த்தகம் இடம்பெற்றதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அந்த பிரதேசத்தில் கடந்த 2700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்துள்ளமை தெளிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை ஒன்று இருந்தமைக்கான தகவல் கிடைத்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் போர்த்துகீசியம் கோட்டைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட அகழ்வின் போது விசேட 9 மண் மேடுகள் இருந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு..! Onnavitta Yaarum Yenakilla Song Lyrics From Seemaraja!
Next articleதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் கிடைக்கும் பயன்கள்!