யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து. ஒருவர் பலி.

0
767

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து. ஒருவர் பலி.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் இன்று மாலை (26.09.2017) இடம்பெற்ற விபத்தில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக இளைஞன் ஒருவன் வந்தவேளை நாயொன்றுடன் மோதி அவர் விபத்துக்குள்ளானதாகவும் அவ்வேளை வீதியோரமாக நின்றிருந்த முதியவருடன் அவருடைய மோட்டார் சைக்கிள் மோதியதால் முதியவர் அருகிலிருந்த தண்ணீர் கால்வாயினுள் விழுந்ததாகவும் தெரிய வருகின்றது.

முதியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: