யாழில் மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் மாப்பிள்ளை!

0
352

யாழ்ப்பாணம் – மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ். மீசாலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் ஜெர்மன் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்திற்கு மாட்டு வண்டியில் வருகை தந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணக் கோலத்தில் இருவரும் தம்பதிகளாக மாட்டு வண்டியில் செல்வதை அப்பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததுடன், ஆச்சரியமடைந்துள்ளனர்.

குறித்த மணமகனுடன் வருகை தந்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர் பாரம்பரியத்துடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரு அதிர்ச்சி செய்தி! இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்ட 700 குழந்தைகள்! கடத்தி வரப்பட்டார்களா?
Next articleஜேர்மனியில் தமிழர்களுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!