யாழில் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட நிலை! ஆசிரியருக்கு கடுமையான எச்சரிக்கை!

0
329

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியிடம் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவியுடன் அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நேற்று தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ். பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், குறித்த மாணவியை வைத்தியசாலையில் சேர்த்து மருத்துவ சோதனை செய்துள்ளனர்.

இதன்போது மாணவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த ஆசிரியரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரை கடுமையாக எச்சரித்து பின்னர் விடுவித்துள்ளனர்.

இதேவேளை, யாழில் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இன்று காலை செய்திகள் பரவியது.

இதில் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் துஸ்பிரயோக செய்தியில் நம்பகத்தன்மை இல்லாத நிலையில், தற்போது உண்மை செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: