யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்!

0
355

யாழ்.அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அளவெட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து தெரிய வருவதாவது,

அளவெட்டி மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு 12 மணியளவில் குளியறை யன்னல் கம்பிகளை வளைத்து மூன்று கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர். மூவரும் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்பு துணி கட்டி இருந்துள்ளார்கள்.

வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டி சத்தம் போட கூடாது என கூறி வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.

தேடுதலின் போது வீட்டில் இருந்த தாலிக்கொடி சங்கிலி மோதிரம் என 15 பவுண் பெறுமதியுடைய நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பி செல்லும் போது மிளகாய் தூளினை வீடு முழுவதும் விசிறி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவற்துறையினருக்கு வீட்டார் அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: