யாழில் ஒருவர் வெட்டிக் கொலை. மகன் படுகாயம். எங்கே செல்கிறது யாழ்ப்பாணம்.

0

யாழில் ஒருவர் வெட்டிக் கொலை. மகன் படுகாயம். எங்கே செல்கிறது யாழ்ப்பாணம்.

இளை­ஞர் கும்­ப­லொன்­றால் கடத்­திச் செல்­லப்­பட்டு வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கிய நிலை­யில் மீட்­கப்­பட்ட குடும்­பத் தலை­வர், சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்­தார். அவ­ரது மகன் படு­கா­யங்­க­ளு­டன் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

மாடு­களை கள­வா­டி­ய­மை­யு­டன் தொடர்­பு­டைய பிணக்­கொன்­றி­னா­லேயே குடும்­பத்­த­லை­வர் கொலை செய்­யப்­பட்­டார் என்று தெரி­விக்­கும் பொலி­ஸார், இந்­தக் கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற குற்­றச்­சாட்­டில் தந்தை, மகன் உற­வுள்ள இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் கூறி­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் யாழ்ப்­பா­ணம் நாவ­லர் சாலை­யைச் சேர்ந்த செல்­வ­நா­ய­கம் இரட்­ண­பா­ல­சிங்­கம் (வயது – 38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். அவர் மூன்று பிள்­ளை­க­ளின் தந்­தை­யா­வார்.

யாழ்ப்­பா­ணம் நாவ­லர் சாலை­யில் உள்ள குடும்­பத் தலை­வ­ரின் வீட்­டில் சம்­ப­வம் இடம்­பெற்­றது. நான்கு மோட்­டார் சைக்­கிள்­க­ளில் சென்ற எட்­டுப்­பேர் கொண்ட கும்­பல் வீட்­டுக்­குள் அத்­து­மீறி நுழைந்து வீட்­டி­லி­ருந்­த­வர்­க­ளைச் சர­மா­ரி­யாக தாக்­கி­யது. பின்­னர் குடும்­பத்­த­லை­வர் மீது வாளால் வெட்­டி­யது. அவ­ரது மக­னை­யும் அந்­தக் கும்­பல் வெட்­டி­யது.

படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் அவ­ரது மக­னான இரட்­ன­பா­ல­சிங்­கம் ரஜீ­வன்(வயது – 18) என்­ப­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

குடும்­பத் தலை­வரை வாள்­வெட்­டுக் கும்­பல் காயத்­து­டன் கடத்­திச் சென்­றுள்­ளது.

நல்­லூர் சங்­கி­லி­யன் பகு­தி­யில் அவ­ரைப் போட்­டு­விட்டு வாள்­வெட்­டுக் கும்­பல் தப்­பிச் சென்­றுள்­ளது. வெட்­டுக்­கா­யங்­க­ளு­டன் குருதி வெள்­ளத்­தில் அவர் கிடந்­துள்­ளார். சாலை­யில் பய­ணித்­த­வர்­கள் அது தொடர்­பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ள­னர். அங்கு சென்ற பொலி­ஸார் சாலை­யில் பய­ணித்­த­வர்­க­ளு­டன் இணைந்து படு­கா­ய­ம­டைந்து கிடந்­த­வரை மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றுக் காலை சேர்த்­தி­ருந்­த­னர்.

சிகிச்சை பல­ன­ளிக்­காது அவர் சில மணி­நே­ரத்­தில் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொண்ட பொலி­ஸார் கொலைச் சந்­தே­கத்­தில் நல்­லூ­ர­டி­யைச் சேர்ந்த ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த தந்தை மகன் இரு­வ­ரை­யும் கைது செய்து செய்­துள்­ள­னர். இரு­வ­ரும் பொலிஸ் நிலை­யத்­தில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக பொலி­ஸார் நீதி­மன்­றில் அறிக்கை தாக்­கல் செய்­த­னர். சம்­பவ இடத்­துக்கு நீதி­வான் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொண்­டார். அத்­து­டன், யாழ் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த இறந்­த­வ­ரின் சட­லத்தை பார்­வை­யிட்ட நீதி­வான், உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்­டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அபகரிப்பு
Next articleஉள்ளாடை பூங்கொத்து, 999 ஆணுறை மூலம் காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்.