யாழில் இப்படி ஒரு பயங்கரம்!! முற்றுகையில் சிக்கிய முக்கிய பொருட்கள்!

0
393

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய வந்த, தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையமொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோவில் பணிப்புக்கமையவே, இன்று மாலை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும், மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை நிலையத்தால் தினமும் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளைஞனின் மரணத்தில் உயிர் தப்பிய ஆறு பேர்! இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!
Next article20 வருடமாக பல் விலக்காத மனிதர்: இப்போ என்ன ஆனார் தெரியுமா?