யார் செய்த கொடுமை! வீதியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை!

0
354

தம்புள்ளை – போஹோரன்வெவ பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வீதியில் பயணித்த வாகன சாரதி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இன்று காலை குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் பிறந்திருக்கலாம் எனவும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாயை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: