யானை செய்த காரியம் மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு!

0
239

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் சென்ற நபரை துதிக் கையினால் தூக்கி நிலத்தில் அடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அரலகங்கவில கல்எளிய பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது, யானைத் தாக்கியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியில் நின்றிருந்த யானை மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை துதிக் கையினால் தூக்கி நிலத்தில் எறிந்து அவரது தலையில் மிதித்துள்ளது.

கல்எளிய ருஹனுகம என்னும் இடத்தைச் சேர்ந்த ரத்னபால என்ற 65 வயதான நபரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காட்டு யானைகள் தொல்லை குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: