மோதலாக மாறிய வன்முறை! வீதியால் சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்!

0
488

ஹம்பாந்தோட்டையில் வீதியால் சென்ற நபருக்கு கண் பார்வை இழந்து போனமையினால் மோதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இருந்து வெட்டிய வரையிலான வீதிகளுக்கு நேற்று முன்தினம் தார் பூசியமையினால் 3 வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் தனது பார்வையை இழந்துள்ளார். இதனால் வாகன சாரதிகளுக்கும், வீதியில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபரின் மீது தார் தெறித்து பட்டுள்ளது. இதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது பார்வை ஆபத்தான நிலையிலேயே உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் காரணமாக குறித்த வீதியில் பயணித்த அனைத்து வாகனங்களினதும் போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளது.

மாலை 3 மணியளவில் குறித்த வீதியில் சென்ற 10 வாகனங்கள் மீது தார் தெளித்துள்ளது. இதனால் சாரதிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் வீதியில் பணியாற்றியவர்களிடம் வினவிய போது, அவர்கள் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தமையினால் அந்த இடத்தில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் தலையிட்டு சம்பவத்தை அமைதிபடுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த வீதி நிர்மாணிப்பு ஒப்பந்த நிறுவனம் சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleசுப நிகழ்வுகளை ஞாயிற்று கிழமைகளில் வைக்க கூடாது! என்ன‌ காரணம் தெரியுமா?
Next articleவீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த மாதம் எது?