மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்! இந்த விஷயம் தெரிஞ்ச இனி பாக்கவே மாட்டீங்க!

0
1110

தொழிநுட்பம் ஒருபுறம் மாபெரும் வளர்ச்சி அடைந்தாலும் மறுபுறம் அதை சார்ந்த குற்றங்களும், தவறுகளும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. குறிப்பாகா தொலைபேசி சம்மந்தமான கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் அதிவேக இணையத்துடன் தொலைபேசி உள்ளது.

இணையம் பலநேரங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் சிலநேரம் ஆபத்தாகவும் உள்ளது. அதில் ஒன்றுதான் ஆபாச படம் பார்ப்பது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதோடு மேலும் பலவகைகளில் தீங்கு விளைவிக்கின்றது. குறிப்பாக தொலைபேசியில் ஆபாச படம் பார்க்கும்போது பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

1 . சட்டவிரோத வாஸ் சந்தாக்கள்
தொலைபேசியில் ஆபாச படம் பார்க்கும்போது சட்டவிரோதமாகா செயல்படும் ஒருசில வாஸ் சந்தாக்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தொலைபேசியில் ஆக்டிவேட் செய்யப்படும்.

2 . தகவல் திருட்டு
உங்கள் தொலைபேசியில் நீங்கள் ஆபாச படம் பார்க்கும்போது உங்களது தகவல்கள் உங்களுக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வங்கி சம்மந்தமான தகவல்கள் திருட்டு போக அதிகவாய்ப்புள்ளது.

3 . மால்வேர் அல்லது வைரஸ்
இலவசமாகத்தானே கிடைக்கிறது என்று நீங்கள் அணுகும் இணைத்தளங்கள் வழியாக உங்களுக்கே தெரியாமல் மால்வேர் என சொல்லப்படும் வைரஸ்களை உங்கள் தொலைபேசியில் பரப்பி உங்கள் தொலைபேசியை செயளிக்க செய்யமுடியும்.

4 . அந்தரங்க விஷயங்கள்
மேலும் நீங்க பார்க்கும் ஆபாச இணையதளங்கள் மூலம் உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் உங்கள் அந்தரங்கம் சார்ந்த விஷயங்கள் வெளியே கசிய அதிக வாய்ப்புள்ளது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: