மொட்டை மாடியில் தூங்க சென்ற அண்ணன், தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி?

0

மொட்டை மாடியில் தூங்க சென்ற அண்ணன், தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி?

சேலம்மாவட்ட‌த்தை சேர்ந்தவர் 26 வயதான அபிஷேக். இவர் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஜெபினா என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார் பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அபிஷேக் பிரிந்து சென்று தனது பாட்டி மற்றும் தங்கை அபிநயாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு மொட்டை மாடிக்கு படுக்க சென்ற அண்ணன் விடிந்தும் வெகு நேரம் ஆகி கீழே வராததால் அண்ணனை பார்க்க தங்கை மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

அங்கு இரத்த காயங்களுடன் அண்ணன் சடலமாக கிடந்ததைப் பார்த்து கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.உடனடியாக போலீசார்ருக்கும் தகவல் தெரிவித்தனர், அதனை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத ப‌ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதோனிக்காக புதிய பாடல் எழுதும் பிராவோ, செம குஷியில் ரசிகர்கள்.
Next articleஇன்றைய ராசி பலன் 09.05.2020 Today Rasi Palan 09-05-2020 Today Calendar Indraya Rasi Palan!