மைனர் பெண்ணுக்கு மாப்பிள்ளையை கடத்தி வந்து திருமணம் செய்து வைத்த பெற்றோர்!வீடியோ ஆதாரம்!

0
257

வேலூர் அருகே 21 வயது வாலிபர் ஒருவரை கடத்தி 17 வயது மைனர் பெண்ணுக்கு பெண்ணின் பெற்றோரே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே உள்ள ஜோலார்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கு காதல் மலர்ந்தது. ஆனால் ஜாதியை காரணம் காட்டி சதீஷின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெற்றோரின் பேச்சை கேட்டு சுமதியை சதீஷ் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தன்னை காதலித்துவிட்டு தற்போது சதீஷ் கைவிட நினைப்பதாக அவர் தனது பெற்றோரிடம் கூற, அதிர்ச்சியான பெற்றோர் இரவோடு இரவாக சதீஷை கடத்தி வந்து சுமதிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சதீஷின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்கள் மகனை கடத்தி மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சுமதியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் புகாரில் சதீஷின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: