மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை

0

மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை

மேஷம்:

27.12.2020 முதல் ராசிக்கு 10-ல் வரும் சனி பகவான் இதுவரை சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவார். எதிரும் புதிருமாக இருந்த கணவருடன் மனம்விட்டுப் பேசி ஒன்றுசேருவீர்கள். பிள்ளைகளின் கூடாபழக்கங்கள் விலகும். அவர்களின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சொத்துகளைக் கவனமாகக் கையாள்வது நல்லது. வியாபாரத்தில் இனி கணிசமான லாபம் உண்டு. போட்டியாளர்கள் திகைக்கும் அளவுக்கு புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்தியோகத்தில் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும்கூட சில பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். முக்கிய ஆவணங்களைக் கவனமாக கையாளுங்கள். இந்த சனிப்பெயர்ச்சி அரைகுறையாக நின்ற அனைத்து வேலைகளையும் முழுமையாக முடிக்கும் திறனையும், செல்வம் – செல்வாக்கையும் அள்ளித் தருவதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீரியல் நடிகை சித்ரா தற்கொலை காரணம் என்ன? ஹோட்டலில் என்ன நடந்தது சித்ரா மரணத்தில் வெளியான திடுக்கிடும் உண்மை ! நேற்று இரவு நடந்தது இதுதானா !
Next articleரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை